லொஸ் ஏஞ்சல்ஸில் வெடிக்கும் கலவரம்: ட்ரம்ப் முன்வைத்துள்ள கோரிக்கை!
அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரியான டொம் ஹோமன், கலிபோர்னியாவின் ஆளுநர் கெவின் நியூசமை கைது செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸில் வார இறுதியில் ட்ரம்பின் குடியேற்ற சோதனைகள் தொடர்பாக போராட்டக்காரர்கள், அதிகாரிகளுடன் மோதியதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் நான்காவது நாளாக அமைதியின்மை நிலவி வருவதால், இன்று ட்ரம்ப் நிர்வாகமும் கலிபோர்னியா அதிகாரிகளும் தொடர்ந்து ஒருவரை ஒருவர் பழி சுமத்தி வருகின்றனர்.
கைது செய்ய வேண்டும்..
இந்நிலையில், கலிபோர்னியாவின் ஆளுநர் கெவின் நியூசம், "அந்த மாநிலத்தை கவனிக்க தவறவிட்டார்" என்றும்,
அந்த போராட்டங்களை நிறைவுக்கு கொண்டு வருவதில் தாமதமாகிவிட்டார் என்றும் ட்ரம்ப் நிர்வாக எல்லைப் பேரரசர் என்ற அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி டொம் ஹோமன் இன்று காலை கூறியுள்ளார்.

இதற்கு மத்தியில், "எனக்கு கெவின் நியூசம் பிடிக்கும். அவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் அவர் மிகவும் திறமையற்றவர். அனைவருக்கும் அது தெரியும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர் கட்டாயபடுத்தும் நடவடிக்கையை வேடிக்கை பார்ப்பதுதான்" என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, லொஸ் ஏஞ்சல்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை, தொழில்முறை கிளர்ச்சியாளர்கள் என்று ட்ரம்ப் விபரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri
நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாகும் 25 வயது நடிகை.. SMS கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் Cineulagam