இந்தியாவின் மணிப்பூரில் ஊரடங்கு..! வெடித்த கலவரம்
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆயுதமேந்திய மெய்தி தீவிரவாதக் குழுவான அரம்பாய் தெங்கோலின் ஐந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் குறித்த குழுவின் தலைவரான அசெம் கனன் சிங்கும் ஒருவர் ஆவார்.
2023ஆம் ஆண்டு மாநிலத்தில் வெடித்த வன்முறையுடன் தொடர்புடைய பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மணிப்பூரின் இம்பால் விமான நிலையத்தில் வைத்து கனன் சிங் கைது செய்யப்பட்டார்.
அமைப்பின் முக்கியஸ்தர்கள் கைது
தம்மை ஒரு சமூக அமைப்பாக அடையாளப்படுத்திக்கொள்ளும் அரம்பாய் தெங்கோல் அமைப்பிற்கு மணிப்பூர் மக்களிடையே கணிசமான ஆதரவு காணப்படுகின்றது.
எனவே, அமைப்பின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
இதன்போது, போராட்டக்காரர்கள், ஒரு பொலிஸ் நிலையத்தை தாக்கியுள்ளதோடு பேருந்து ஒன்றிற்கும் தீ வைத்துள்ளனர்.
இணைய சேவை நிறுத்தம்
அத்துடன், சில போராட்டக்காரார்கள், பாதுகாப்பு படையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இணையம் மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை மாநில அரசு ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
