அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகிறார்..!
அவுஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ், இன்று இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.
இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக, இந்த விஜயம் அமைகிறது.
கலந்துரையாடல்
தனது பயணத்தின் போது, துணைப் பிரதமர் மார்லஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
அவர், பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலையும் நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைப் பிரதமர் மார்லஸுடன் பிரதமர் அலுவலகம், பாதுகாப்புத் துறை மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த அதிகாரிகளும் இலங்கை வருகின்றனர்.



