இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகும் அவுஸ்திரேலிய நிறுவனம்
இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலியாவின் யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனம், இலங்கையில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டின் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்ட யுனைட்டெட் பெட்ரோலிய நிறுவனம், சுமார் 27.5 மில்லியன் டொலர்களை இலங்கையில் முதலீடு செய்திருந்தது.
அதன் காரணமாக சுமார் ஐநூறு அளவிலான எரிபொருள் விநியோக நிலையங்கள் யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
முதற்கட்ட நடவடிக்கைகள்
எனினும், தற்போதைய நிலையில் பெட்ரோலிய விநியோகத்தில் தம்மால் சமாளிக்க முடியாத சிக்கல்கள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள யுனைட்டெட் பெட்ரோலியம் நிறுவனம், அதன் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறப் போவதாக அறிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு அதன் பணியாளர்களின் ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam