இலங்கை தமிழ் குடும்பத்திற்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அவுஸ்திரேலியா!
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழ் குடும்பமான பிரியா - நடேசலிங்கம் குடும்பத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் நிரந்தர விசா வழங்கியுள்ளது.
தற்போது அவர்கள் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் வசித்து வருகின்றனர்.
இது தொடர்பில் நடேசலிங்கத்தின் வீட்டுக்கு இன்று சென்று அதிகாரிகள் இது குறித்து அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடேஸ் - பிரியா குடும்பத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
2018 ஆம் ஆண்டில் இவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த போது, சட்டவிரோமாக தங்கியுள்ளதாகத் தெரிவித்து இவர்களை கைது செய்த அதிகாரிகள் மெல்போர்ன் தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
அதன் பின்னர் பல்வேறு போராட்டங்களின் பின், பிள்ளையொன்றின் சிகிச்சை நடவடிக்கைகளை கருத்திற்கொண்டும் தற்காலிக வீசாவை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் தற்போது அவர்களுக்கு நிரந்தர வீசாவை வழங்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நடேஸ் - பிரியா தம்பதிக்காக போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.