இலங்கை விமானப்படைக்கு கிடைக்கவுள்ள புதிய கண்காணிப்பு விமானம்
அவுஸ்திரேலியாவின் (Australia) ரோயல் அவுஸ்திரேலியன் விமான படை Royal Australian Air Force பயன்படுத்திய Beechcraft King கண்காணிப்பு விமானம் இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது, விமானப்படை - இலக்கம் 03 என்னும் கடல்சார் படையுடன் இணைக்கப்பட்ட கடமைகளை ஆரம்பிப்பதற்காக பயன்படுத்தப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
கடல்சார் திறன்
இலங்கைக்கு சொந்தமான கடல் வலயத்தில் கடல்சார் திறனை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மானியமாக இந்த விமானம் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள், சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் மற்றும் மனித கடத்தல்களை இல்லாதொழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
