அவுரா லங்கா நிறுவன உரிமையாளருக்கு விளக்கமறியல்
சர்ச்சைக்குரிய அவுரா லங்கா நிறுவன உரிமையாளர் விரஞ்சித் தாம்புகலவுக்கு எதிர்வரும் 27ம் வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
70 மில்லியன் ரூபா மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் விரஞ்சித் தாம்புலவுக்கு எதிரான முறைப்பாட்டின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 27ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கற்றாழை வளர்ப்பு, மனித உரிமைகள் அமைப்பு போன்ற பல்வேறு துறைகள் ஊடாக விரஞ்சித் தாம்புலக பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்துள்ள நிலையில், அவர் நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |