கிழக்கின் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இணக்கப்பாடு: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு

TNA Ranil Wickremesinghe Eastern Province Northern Province of Sri Lanka
By Kumar Dec 21, 2023 11:43 PM GMT
Report

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டோரின் விடுதலை, மயிலத்தமடு மாதவணை பிரச்சனை போன்றவற்றிற்கு  பேச்சளவில் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மேற்கொண்ட சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு அமைய தற்காலிக ஊழியர்கள் நிரந்தரமாக்கல்,13வது திருத்தம் முழுமையாக நடைமுறையாக்கல், வடகிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஜனாதியுடனான  சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

யாழில் கூரிய ஆயுதங்களுடன் ஒருவர் கைது

ஜனாதிபதியுடனான சந்திப்பு

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“ ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வடகிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

கிழக்கின் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இணக்கப்பாடு: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு | Attuned To The Problems Of The East In Speech

இதில் உண்மைக்கும், ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவை அமைப்பதற்கான வரைபொன்று அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஜனவரி மாதத்தில் இதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதாகப் பேசப்பட்டது.

அத்துடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது.

பூநகரியில் சோளார் மற்றும் காற்றாளை திட்டங்கள், இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்வது, இந்தியாவில் இருந்து குழாய் மூலமாக மின்சாரம், எரிபொருட்கள் கொண்டுவருவதுடன், இலங்கை இந்தியாவிற்கிடையில் தரைவழிப் பாதை போன்றவற்றுக்கான திட்டங்களும் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இதன்போது எங்களாலும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்த வண்ணம் இருப்பது தொடர்பிலும், கடந்த நவம்பர் மாதமளவிலும் மட்டக்களப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டு அதில் 4 பேர்தான் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

யாழில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : ஏழுபேர் காயம்

யாழில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் : ஏழுபேர் காயம்

விரும்பத்தகாத பொலிஸ் செயற்பாடு 

ஏனையவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையும் மாவீரர் தின நிகழ்வுக்காக நிதி கோரியதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடயமும் சுட்டிக் காட்டப்பட்டது.

கிழக்கின் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இணக்கப்பாடு: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு | Attuned To The Problems Of The East In Speech

இதன்போது மட்டக்களப்பில் ஒரு வித்தியாசமான நிலைமை இருப்பதாகவும், மட்டக்களப்பில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என்ற கருத்துப்பட ஜனாதிபதி விடயங்களைத் தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு தான் ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் காணிப் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நாங்கள் மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை விவகாரம் சம்பந்தமாகத் தெரிவித்தோம். அது தொடர்பிலும் மிக விரைவில் உரிய தீர்மானம் எடுப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உள்ளூரட்சி மன்றங்களிலே நீண்ட காலமாக  தற்காலிக அடிப்படையில் வேலை செய்கின்ற ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் நாங்களும் எமது கோரிக்கையை முன்வைத்தோம்.

இது தொடர்பிலும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த விடயத்திற்கும் விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் 13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெரிவிதுள்ளார்.

இதன்போது பிரதேச செயலாளர்களை மாகாண சபையின் கீழ் கொண்டு வருவதற்கு தான் ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இயல்பு நிலைக்கு திரும்பிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள்

இயல்பு நிலைக்கு திரும்பிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள்

13வது திருத்தச் சட்டம் நடைமுறையாக்கம்

இதன் போது நான்(கோவிந்தன் கருணாகரம்) தெரிவிக்கையில்,

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு பின்னர் 1988ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் அந்த அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டது.

கிழக்கின் பிரச்சினைகளுக்கு பேச்சளவில் இணக்கப்பாடு: கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டு | Attuned To The Problems Of The East In Speech

ஆரம்ப காலத்தில் மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர் என்று தான் இருந்தது. அதனை 1988ல் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் என்று சொல்லி அவர்களை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றைய நிலையில் கிராமசேவை உத்தியோகத்தர் பதவி கூட மாகாணசபைக்கு பதில் அளிக்க முடியாமல் மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றது.

அது மாத்திரமல்லாமல் நாடாளுமன்றத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்த போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினரகளிடமும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தெரியப்படுத்தி இருந்தீர்கள். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்தார்கள்.

எனவே 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வராது என்று நினைக்கின்றோம்.

13வது திருத்தம் புறையோடிபோயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாது விட்டாலும் ஒரு இடைக்காலத் தீர்வாகக் கிடைக்கப்பட்டது.

அதையாவது முற்றுமுழுதாக நிறைவேற்றினால் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடு மிக விரைவில் மீண்டெழும்” என்றேன்.

யாழில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 6 பேர் கைது

யாழில் போதைப் பொருள் சுற்றிவளைப்புகளில் 6 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US