இன்னும் 15 நாட்களில் கவனயீர்ப்பு பேரணி - ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ள மனு
நெல்லுக்கான உரிய நிர்ணய விலையை வலியுறுத்தி எதிர்வரும் 16.06.2026 அன்று கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த பேரணிக்கான ஏற்பாடுகளை இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் செய்துள்ளது.
கவனயீர்ப்பு பேரணி
இன்னும் 15நாட்களில் நெல் அறுவடை செய்யப்படவுள்ள நிலையில், உற்பத்தி செலவுக்களுக்கு ஏற்ப நெல்லுக்கான நிர்ணய விலை கிடைக்கவில்லை என்றும், உரிய விலையை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவொன்றும் ஜனாதிபதி உள்ளிட்டோருக்கு கையளிக்கப்படவுள்ளது. இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் முத்து சிவமோகன் மற்றும் மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் அதிகார சபை தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு காணொளியொன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.