சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (PHOTOS)
திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று குறித்த சந்தேக நபர்களை முன்னிலைப்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு

கைது செய்யப்பட்ட 03 தாய்மார்களையும்,02 பெண்களையும் 25000 ரூபாய் சரீர பிணையில் செல்வதற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து சிறுவர்களை விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நபர்கள் கம்பஹா, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களில் ஒருவர் சுகயீனம் காரணமாக இருப்பதால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் குறித்த நபரை 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.
| சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 56 பேர் கைது |
| எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் |
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri