சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 56 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் நேற்றிரவு (02)கைது செய்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர்
கைதானாவர்களில் கடத்தல்காரர்கள் 6 பேர் உட்பட 41 ஆண்களும், 6 பெண்களும் மற்றும் 3 சிறுவர்களும் அடங்குவதாக கடற்படையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 முதல் 56 வயதுக்குட்பட்டவர்களாவர்.
தடுத்து வைப்பு
கைது செய்யப்பட்டவர்களை தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைத்து வாக்குமூலம் பெற்றுவருவதுடன் இன்று(03) மாலை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்-ராகேஷ்
மாரவில பிரதேசம்
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்வதற்கு தயாராக இருந்த 25 பேர் மாரவில பிரதேசத்தில் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கடற்படையின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,“இலங்கை கடற்படை, இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று மாரவில பிரதேசத்தில் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக செல்வதற்கு தயாராக இருந்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளோம்.
இவர்களில் 9 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் உட்பட 25 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 25 பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் ஹலவத்தை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
25 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி-ராகேஷ்