எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்! இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் இராணுவ சிப்பாய் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கதுருகசர பொறியியலாளர் படை முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பிலிபிட்டிய, அஞ்சல் 99, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 5 நாட்களுக்குப் பின்னர் இன்று வருகை தந்த எரிபொருள் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோபமடைந்த மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவ சிப்பாயின் கடமை நேர துப்பாக்கியை பறிப்பு
இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த இராணுவ சிப்பாயுடன் இருவர் மோதலில் ஈடுபட்டுள்ளதுடன், இராணுவ சிப்பாயின் கடமை நேர துப்பாக்கியை பறித்து சென்றுள்ளார்.

இதன்போது மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் இராணுவ அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் காயமடைந்த நிலையில், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முடக்கப்பட்டுள்ள நிதியைத் தொட்டுப்பாருங்கள்... ஐரோப்பாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புடின் News Lankasri
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri