முல்லைத்தீவில் மர்மமாக உயிரிழந்த சிறுமி விவகாரம்: மேலும் மூவரிடம் பொலிஸார் விசாரணை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மூங்கிலாற்றுபகுதியில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பில் மேலும் மூவரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் நேற்று மருத்துவ அறிக்கையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் அக்காவின் கணவரை பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மேலும் விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட அத்தான் முறையானவரை 19.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் வாசல் தலத்தில் முன்னிலைப்படுத்தி அவரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமையினை தொடர்ந்து மன்று அதற்கான உத்தரவினை வழங்கியுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாய்,தந்தை,அக்கா ஆகியோரிடம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.