மன்னாரில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்
மன்னார் ஊடகவியலாளர் ஆர்.ரவிக்குமாரின் வீட்டின் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாகக் கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாகச் செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளருக்கு மதகுருவொருவர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது வீட்டின் மீதும் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டபோது வீட்டில் ஊடகவியலாளரின் மனைவியும் பிள்ளைகளுமே இருந்த நிலையில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மடு பொலிஸில் ஊடகவியலாளர் சகிதம் சென்று முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam