சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்
அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட பிரபல வர்த்தகரான 'கிளப் வசந்த' என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, சனிக்கிழமை மாலை 4.30க்கு பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த (08) ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் பலத்த பாதுகாப்பு
இந்நிலையில், சந்தேகநபர்கள் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மன்னாரில் பல இடங்களில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டுத்தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மன்னாரில் இருந்து மீன்பிடி படகுகளில் மீன்பிடி அடையாள அட்டை இல்லாமல் பயணிப்பவர்களை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri