மட்டக்களப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதி
மட்டக்களப்பு மாவட்ட விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகள் இன்று (22) சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அமைச்சர்களிடம் கோரிக்கை
விவசாய நடவடிக்கைகளில் தாங்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சினைகள் மற்றும் சவால்களை எடுத்து விளக்கிய விவசாயிகள், இவற்றை நிவர்த்திக்க அவசர முயற்சிகளை செய்யுமாறு அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
விவசாயிகளின் பிரச்சினை
விவசாயிகளின் பிரச்சினைகளை செவிமடுத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நாலாயிரம் தொன் பசளையை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபரில் செய்கை செய்யவுள்ள பெரும்போக செய்கைகளுக்கு இந்த பசளைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

மேலும், உரிய வேளைக்கான நீர்ப்பாசனம், கால்நடையாளர்களால் உரிமை கோரப்படும் மேய்ச்சல் தரை போன்ற விடயங்களுக்கு இருதரப்பினருடனும் கலந்துரையாடி முடிவெடுப்பதென இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அமைச்சர் நஸீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ,
பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், அமைச்சின் செயலாளர் புஷ்பகுமார
ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri