பிரபல கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்கள் முடக்கம்
நிகழ்நிலை சூதாட்ட செயலி ஒன்று தொடர்பான வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சுரேஷ் ரெய்னாவின் 6.64 கோடி சொத்துக்களும் ஷிகர் தவானின் 4.50 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது 38 வயதாகும் சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரராக இருந்ததோடு இப்போது அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் செயற்படுகின்றார்.
அழைப்பாணை
இவ்வாறிருக்க, ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த ஒகஸ்ட் மாதம் அவரை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இந்திய அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இதேபோல, ஷிகர் தவானுக்கும் இந்திய அமலாக்கத்துறையால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இருவரினதும் 11 கோடி அளவிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |