சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த சுரேஷ் பிரேமச்சந்திரன்
மீண்டும் கூட்டமைப்பாகச் செயற்பட நிபந்தனை விதிப்பது நல்லதல்ல என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (06.11.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி முறைகளை விடுத்து அரசு ஆளுநர் ஆட்சியை நடத்துவதை நிறுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றது.
உயிர் அச்சுறுத்தல்
இதனடிப்படையில், பார்க்கும் போது அடுத்த வருடமும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் அரசு இல்லை எனத் தெரிகின்றது. எல்லை நிர்ணய வேலைகளை விரைவில் மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை அரசு நடத்த வேண்டும்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்துப்பாக்கிகளைக் கோரியிருக்கின்றனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் கைத்துப்பாக்கிகளைக் கோரியிருக்கலாம்.

கடந்த அரசுகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருந்தது. ஆனால், இந்த அரசு பாதுகாப்பு வழங்காத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கலாம். அரசு முதலில் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan