அசோக ரன்வல மீதான மருத்துவ பரிசோதனையில் நம்பிக்கையின்மை! ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு
முன்னாள் சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல விபத்தை ஏற்படுத்திய சந்தர்ப்பத்திலேயே மது போதையில் வாகனம் செலுத்தினாரா என்று பரிசோதனை நடத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சட்டத்தரணி யோஹான் ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை
தொடர்ந்துரையாற்றிய அவர், அசோக ரன்வல மது அருந்தியுள்ளாரா என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டாரா?எத்தனை மணிக்கு பரிசோதனை நடத்தப்பட்டது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
விபத்து நடந்தது நேற்று ஆனால் இன்று (12.12.2025) அவரை மருத்துவ பரிசோதனைகளுக்கு பரிந்துரைப்பது பயனற்றது. மது அருந்துபவர்கள் தேசிய மக்கள் சக்தியில் இல்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
இந்த விபத்து எதிர்க்கட்சி எம்.பி.யால் ஏற்பட்டிருந்தால்,இன்று நடந்திருப்பது வேறு. எனவே, இதுபோன்ற சம்பவத்தில் மோசடிகள் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நாங்கள் பொலிஸார் நடத்தும் விசாரணைகளை கவனித்து வருகிறோம் என்றார்.
கார் விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் சபாநாயகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டனர். ஆனால் விசாரணையில் அவர் மதுபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri