எனது ஒழுக்கத்தை பற்றி உங்கள் அண்ணனிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்! ஜனாதிபதிக்கு சுசில் பதிலடி
எனது ஒழுக்கத்தை பற்றி உங்கள் அண்ணனிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இதன் பின்னர் தனது அமைச்சிலிருந்து வெளியேறிய அவர், இந்த பதவி நீக்கமானது தனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
தனது அரசியல் வாழ்க்கையில் தான் நேர்மையாக செயற்பட்டதாகவும்,தன்னை பற்றி ஜனாதிபதி அறிந்துக்கொள்ளாவிட்டால் அவரது அண்ணாவான பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டு தனது ஒழுக்கம் பற்றி தெரிந்துக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
மேலும்,ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிர் காலத்தில் மக்கள் ஆதரவு மட்டுமல்ல பெரும்பான்மை பலம் இருக்குமா என்று சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த அண்மைய காலமாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தமையினாலேயே ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்...
பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்! - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை! - அரசாங்கத்திற்கு எதிராக திரும்பும் அமைச்சர்கள்?
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan