ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை! - அரசாங்கத்திற்கு எதிராக திரும்பும் அமைச்சர்கள்?
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்த, தனது பதவி நீக்கம் தொடர்பில் பதிலளிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி அனைத்து விடயங்களையும் பொதுமக்களுக்கு முன்வைக்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் மேலும் பல அமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது குறித்த உறுதியான தகவல்களை எவையும் வெளியாகவில்லை.
முன்னதாக இன்று காலை தனக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு உடன் அமுலாகும் வகையில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி பதவி நீக்கியிருந்தர்.
அண்மைய நாட்களாக அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்து வந்த நிலையிலேயே, சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமைச்சர்! - ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை (Video)

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
