2 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சி
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில் 184 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில் பெறப்பட்ட ஓட்டங்கள்
இலங்கை அணி சார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களையும், தசுன் சானக்க 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் சாமிக்க கருணாரத்ன 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
Sri Lanka are through to the Super Four phase of #AsiaCup2022 after winning a nail-biter ?#SLvBAN | #AsiaCup2022 | ? Scorecard: https://t.co/pxH6nCOZsp pic.twitter.com/wTDsPa4Yju
— ICC (@ICC) September 1, 2022
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam