ஆஷு மாரசிங்க கட்சியிலிருந்து நீக்கம் - அறிக்கை வெளியிட்டு கண்டனத்தை வெளியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி
முன்னாள் அமைச்சர், பேராசிரியர் ஆஷு மாரசிங்கவின் கருத்துக்களுக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான பேராசிரியர் ஆஷு மாரசிங்க அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு ஆதரவாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
கட்சியிலிருந்து நீக்கம்
இந்நிலையில், பேராசிரியர் ஆஷு மாரசிங்கவின் கருத்துக்களுக்கும் தமது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
ஆஷு மாரசிங்க தற்போதைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும், அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam