சர்வதேச பாடசாலை மாணவிகளை குறி வைக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்
களுத்துறை மாவட்டத்தில் உள்ள சர்வதேச பாடசாலைகளின் மாணவிகளை குறி வைத்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் நேற்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த சர்வதேச பாடசாலைகளின் மாணவிகளை கட்டாயப்படுத்தி தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தகாத நடவடிக்கை
இது தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்து, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தகவல் வெளியிடும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பணியக அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri