30 நாட்களுக்குள் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் ஜனாதிபதி - விதிக்கப்பட்ட காலக்கெடு

Anura Kumara Dissanayaka Election NPP Government
By Rakesh Jun 18, 2026 10:34 PM GMT
Report

மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் தற்போதைய சூழலில் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டு வருகின்றன என்று கவலை வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநருமான சுரேன் ராகவன், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த 30 நாள்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடத்தப்படும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்று தங்களுக்குரிய முதன்மைக் கோரிக்கையை முன்வைத்துள்ள அவர், தற்போதைய அரசு புலம்பெயர் அமைப்புகளிடம் பணம் பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உடனடியாகப் பகிரங்கப் பதிலளிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர் - தவிக்கும் மனைவி

மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதி அநுரகுமார மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய தலைவரான ரில்வின் சில்வா ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது குறித்து கடந்த காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்நேரத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.

30 நாட்களுக்குள் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் ஜனாதிபதி - விதிக்கப்பட்ட காலக்கெடு | Election Date Within 30 Days Deadline Set

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நாம் அடுத்தகட்டப் போராட்டங்களில் இறங்குவதற்கு முன்பதாக, எம்மால் கொடுக்கக்கூடிய அனைத்து அரசியல் அழுத்தங்களையும் தற்போதைய அரசுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

எனவே, வரும் 30 நாள்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்.

இதேவேளை, அண்மையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி தற்போதைய அரசின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டொன்றைச் சுமத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டின்படி, தற்போதைய அரசானது புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும், விடுதலைப்புலிகளுக்குச் சார்பான அமைப்புகளிடமிருந்தும் நேரடியாகப் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நிதியைப் பெற ஜே.வி.பி. தரப்பு முயன்ற போது

அத்துடன், லண்டனில் இவ்வாறான நிதியைப் பெற ஜே.வி.பி. தரப்பு முயன்ற போதே அங்குள்ள அமைப்புகள் அதனை நிராகரித்துவிட்டதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

30 நாட்களுக்குள் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும் ஜனாதிபதி - விதிக்கப்பட்ட காலக்கெடு | Election Date Within 30 Days Deadline Set

இந்த விவகாரமானது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பில் மிக ஆபத்தானது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ரில்வின் சில்வா ஆகியோர் நாடாளுமன்றத்துக்குள் மட்டுமன்றி, நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் வந்து மக்களுக்குப் பகிரங்கமாகப் பதிலளிக்க வேண்டும்.

பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்தோ அல்லது விடுதலைப் புலிகளுக்குச் சார்பான இயக்கங்களிடமிருந்தோ தற்போதைய அரசு எந்தவித நிதியையோ அல்லது உதவிகளையோ பெறவில்லை என்பதை அவர்கள் நாட்டுக்கு ஆதாரங்களுடன் தெளிவுபடுத்த வேண்டும்.

அவ்வாறு அரசால் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாவிட்டால், இந்த அபாண்டமான குற்றச்சாட்டைப் பகிரங்கமாகச் சுமத்திய குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

CID அதிகாரி செய்த செயலால் சலேக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து

CID அதிகாரி செய்த செயலால் சலேக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US