அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழிசுமத்துவது அரசியல் சதி! சரத் வீரசேகர சாடல்

Sarath Weerasekara Easter Attack Sri Lanka Suresh Salley
By Rakesh May 25, 2026 12:32 AM GMT
Report

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிடுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.

முற்றிலும் அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டே இந்த அபாண்டமான குற்றச்சாட்டு தற்போதைய அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிக்கலில் அநுர! எதிர்பாராமல் சூழ்ந்த 2 பெரும் ஆபத்துக்கள்..

சிக்கலில் அநுர! எதிர்பாராமல் சூழ்ந்த 2 பெரும் ஆபத்துக்கள்..

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்

கொழும்பில் நேற்று(24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விடயம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

"உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு தலைவரான சுரேஷ் சலே எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழிசுமத்துவது அரசியல் சதி! சரத் வீரசேகர சாடல் | Asad Maulana Suresh Sally Easter Attack Evidence

பிரான்ஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானா, தனது புகலிடக் கோரிக்கையை வலுப்படுத்துவதற்காகக் கூறிய கட்டுக்கதைகளையும் வாக்குமூலத்தையும் அடிப்படையாகக் கொண்டே, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தற்போது சுரேஷ் சலேவைப் பிரதான சூத்திரதாரியாகச் சித்தரித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் என்பதும், அவரே தாக்குதல்களை வழிநடத்தினார் என்பதும் இதற்கு முன்னர் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் நடத்தப்பட்ட பல்வேறு பாரிய விசாரணைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகள் ஊடாகத் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறுதி கட்டத்தை நெருங்கிய ஐபிஎல்..! பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த 4 அணிகள்

இறுதி கட்டத்தை நெருங்கிய ஐபிஎல்..! பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த 4 அணிகள்

அரசியல் பழிவாங்கல்

அவ்வாறிருக்கையில், இப்போது திடீரெனப் புதியதொரு விடயத்தைக் நீதிமன்றத்தில் குறிப்பிடுவது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தவறாக வழிநடத்தும் ஒரு கீழ்த்தரமான செயற்பாடாகும். தற்போதைய அரசு கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் விவகாரத்தை முழுமையாக அரசியல்மயப்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் கத்தோலிக்க சபைக்கும், கத்தோலிக்க மக்களுக்கும் வழங்கிய போலி வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே அரசு தற்போது இவ்வாறு திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழிசுமத்துவது அரசியல் சதி! சரத் வீரசேகர சாடல் | Asad Maulana Suresh Sally Easter Attack Evidence

மிகவும் வேடிக்கையான விடயம் என்னவென்றால், 2019 இல் இந்தக் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது நாட்டின் பாதுகாப்புத் துறையில் மிக முக்கிய உயர் பதவிகளில் இருந்துகொண்டு, தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள்தான் இன்று புதிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அன்று கடமையைச் செய்யத் தவறியவர்கள் இன்று பிறிதொரு நேர்மையான அதிகாரி மீது பழிசுமத்துவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும்.

எனவே, அரசியல் தேவைகளுக்காகப் புலனாய்வுத் துறை அதிகாரிகளைப் பலிக்கடாவாக்குவதை நிறுத்தி, யதார்த்தமான முறையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்." - என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US