ராஜபக்சவினருக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ள விடயம்!
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் கூறியது போன்று நாட்டில் தேசிய பாதுகாப்பை எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கம் கூறிய விடயங்கள் தற்போது அவர்களுக்கு சிம்மசொப்பனமாக மாறியுள்ளதாகவும், பட்டப்பகலில் கூட வீடுகளுக்கு வந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டும் நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ராஜபக்ச குடும்ப ஆட்சியின் காரணமாக நாட்டில் விவசாயிகள் நிவாரணமாக பெற்ற உர இருப்புக்களை இழந்துள்ளதுடன் தற்போதைய அறுவடை பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது, தேயிலை உற்பத்தி கூட வீழ்ச்சியடைந்து ஊழல் நிறைந்த ஆட்சி முறை தற்போது உருவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri