ஆறுமுகன் தொண்டமானின் 61ஆவது ஜனன தினம் இன்று
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 61ஆவது ஜனன தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்பட்டது.
கொட்டகலை சி.எல்.எப் ஆறுபடை தாயுமான சிவன் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேவேளை இ.தொ.கா தலைமை காரியாலயம் கொழும்பு சௌமியபவனிலும் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.
கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள்
இப்பூஜை வழிபாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பாரியார் ராஜலஷ்சுமி தொண்டமான், உட்பட இ.தொ.கா உயர்பீட உறுப்பினர்கள், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர் என பலர் கலந்துக் கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
