காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன

Missing Persons Tamils SL Protest
By Thileepan Sep 04, 2025 10:28 AM GMT
Report

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.

தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சனைகள் உள்ளன.

அபகரிக்கப்பட்ட நிலத்தை விடுவித்தல், சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யா வண்ணம் பாதுகாத்தல், யுத்த காலத்தின் போதும், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுதல் என பல பிரச்சனைகள் உள்ளன.

நான் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது..! சாமர சம்பத் பகிரங்கம்

நான் இல்லாமல் யாருக்கும் ஆட்சியமைக்க முடியாது..! சாமர சம்பத் பகிரங்கம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்

இவை அன்றாடம் அவர்களது வாழ்வியலில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது ஏனைவயற்றில் இருந்து வேறுபட்டதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதும் ஆகும். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒக்டோபர் 30 ஆம் திகதி நினைவுகூரப்பட்டது.

அனைத்துலக காணாமற்போனோர் நாள் கொஸ்டரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட 'கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு' என்ற அரச சார்பற்ற அமைப்பினால் லத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலாக முன்வைக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன | Missing Persons Day Tamil Mothers Tears

அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இவ்வாறான இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன.

இவ்வாறு ஆரம்பமாகிய 'காணாமல் போனோர் நாள்' இன்று உலகின் பல நாடுகளிலும் மறைந்து போக, இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அது தொடர்ச்சியாக நினைவு கூரப்படுகின்றது. தொடர்ந்தும் நினைவு கூரவேண்டியுமுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிசார் மற்றும் புலனாய்வுத் துறையினரால் சந்தேகத்தின் பேரிலும், சுற்றி வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்ததின் போது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கு அமைய பலர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டோருமே காணாமல் ஆக்கப்பட்டோராகவுள்ளனர்.

சுமார் 16 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நிறுவனங்களினதும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களினதும் அறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது. இதன் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இவர்களுக்கான தீர்வு என்பது இன்று வரை கானல் நீராகவே உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்படுவோர் குறித்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல் புறச் சூழல் காணப்படவில்லை.

ஆனால் இன்று யுத்தம் முடிந்து 16 வருடங்கள் கடந்து விட்ட போதும் அதில் உள்ள முன்னேற்றம் என்பது கண்துடைப்புக்களுடனேயே உள்ளது. முன்னைய மகிந்த அரசாங்கமானது யுத்த மோதல்களின் போது எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என அடியோடு மறுத்ததுடன், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறலைப் புறந்தள்ளியிருந்தது. ரணில் - மைத்திரி கூட்டரசாங்கமானது பொறுப்பு கூறுவதற்கான ஐ.நா மனித உரிமைப் பேரவையின் இரண்டு பிரேரணைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணையும் வழங்கியிருக்கின்றது.

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் மர்மம் : 4 மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் மர்மம் : 4 மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு

போராட்டங்கள்

ஆயினும் சர்வதேச அழுதத்தை குறைப்பதற்காகவும், கால நீடிப்புக்கள் ஊடாக அதனை நீர்த்துப் போகச் செய்வதற்காகவும் முயன்றதே தவிர அதில் எந்த முன்னேற்றத்தையும் அவதானிக்க முடியவில்லை. காணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் ஐ.நா பரிந்துரையை ஏற்று கடந்த கால அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோருக்கான செயலகம் உருவாக்குதல் மற்றும் நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும் என்ற பெயரிலான அந்த சட்டம் நடைமுறைக்கும் வந்துள்ளது.

இருப்பினும் அந்த அலுவலகம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், மனிதவுரிமையாளர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். இந்த அலுவலகத்தின் கடந்த கால செயற்பாடுகளைப் பார்க்கின்ற போதும் அது வெறும் கண்துடைப்பு அலுவலகமாகவே இருக்கின்றது என்பது புலனாகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன | Missing Persons Day Tamil Mothers Tears

தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமானது தேர்தலின் போது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில் இன்று ஆட்சி பீடம் ஏறி மாதங்கள் பல கடந்த நிலையிலும் அது குறித்து மௌனமாக இருப்பது கடந்த அரசாங்கத்தைப் போன்றே இவர்களது செயற்பாடும் அமையப் போகின்றதா என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் தோற்றிவித்துள்ளது.

ஐ.நாவை கையாள இந்த அரசாங்கம் எவ்வாறு செயற்படப் போகின்றது என்ற எதிர்பார்ப்பும் மக்களிடத்தில் எழுந்துள்ளது. அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி கண்ணீரால் காயத்தை ஆற்றிவிடலாம். அவர்களுக்குரிய கிரியைகளை நடத்தி ஆத்மசாந்திக்காக வழிபடலாம். ஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா, இன்று வருவார்களா, நாளை வருவார்களா என தினம் தினம் எதிர்பார்ப்போடு செத்துப் பிழைப்பது எத்தனை கொடுமையானது.

இந்த நிலைமை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதது. அனுபவிப்பர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய துயரத்தின் உச்சம் அது. அந்த உச்சகட்ட துயரத்துடனேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகள், தமது கணவன்மார், மனைவிமார், உறவுகள் மீள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை எண்ணி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கால நீடிப்புக்களும், இழுத்தடிப்புக்களும் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அசாங்கம் யாருக்கு பொறுப்புக் கூற போகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைத்து திரிந்து நாளாந்தம் போராட்டம் நடத்திய தாய்மார் மரணித்து வருகிறார்கள். அவர்கள் தமது பிள்ளைகளின் முடிவு தெரியாமலேயே தமது உயிரையும் மாய்த்து விட்டார்கள்.

இந்த நிலையை நீடிக்க விடுவதா அல்லது அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா என்பதை தமிழ் தலைமைகளும் உணரவேண்டும். வடக்கு, கிழக்கு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் 3100 நாட்களைக் கடந்தும் சென்று கொண்டிருக்கின்றது.

செம்மணி குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லை! இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு

செம்மணி குறித்து அலட்டிக் கொள்ள தேவையில்லை! இளங்குமரன் எம்.பி தெரிவிப்பு

வாக்குறுதி

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் என பாரியளவிலான போராட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றிருக்கின்றன.

மக்களின் கண்ணீரால் அந்த பிரதேசங்கள் தினமும் நனைந்து கொண்டிருக்கின்றன. போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தமிழ் தேசிய தலைமைகளால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

அந்த மக்கள் அரசாங்கம் மீதும், தமிழ் தலைமைகள் மீதும் அதிருப்தி கொண்டவர்களாக மாறியிருக்கின்றார்கள். தொடர் போராட்டங்களால் உடல், உள ரீதியாகவும் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன | Missing Persons Day Tamil Mothers Tears

காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் சிறைச்சாலைகளிலும், இராணுவ தடுப்பு முகாம்களிலும் மற்றும் சித்திரவதைக் கூடங்களிலும் இருப்பதாக ஆதாரங்கள் பலவும், தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில் கூட அவர்களை விடுவிப்பதற்கும், அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் சர்வதேச அழுத்தத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பதில் அளிக்க வலியுறுத்தாத நிலையில் தமிழ் தேசியக் கட்சிகள் இருப்பது என்பதும் நம்பிக்கையோடு இருக்கும் அந்த மக்களின் மனங்களில் பலத்த சலனங்களை உருவாக்கியிருக்கிறது.

நாடு கடந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் கூட தமது நாட்டையும், மக்களையும் நேசித்தவர்களாக இந்த நாட்டில் இடம்பெற்ற உரிமைப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும். அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என வலியுறுத்திய போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். அதில் பல தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தார்கள்.

செம்மணியில் முன்னெடுக்கப்பட உள்ள நினைவேந்தல் நிகழ்வு! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

செம்மணியில் முன்னெடுக்கப்பட உள்ள நினைவேந்தல் நிகழ்வு! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இழப்பீடு

ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட அந்த மக்களது வாக்கில் பதவிகளையும், சொகுசு வாழ்க்கையும் பெற்று வலம் வரும் அந்த மக்களின் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாகவே இருக்கிறது.

ஆக, இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இந்த அரசாங்கம் சிரத்தையுடன் கையாள்வதாக தெரியவில்லை. இரகசிய தடுப்பு முகாம்கள், சிறைச்சாலைகள் என தடுத்து வைக்ப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன | Missing Persons Day Tamil Mothers Tears

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சில இரகசிய வதை முகாம்கள் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றது. முன்னாள் கடற்படைத் தளபதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்கான இழப்பீடு சர்வதேச சட்ட நியாயங்களுக்கு ஏதுவான நிலையில் வழங்கப்பட வேண்டும்.

அவர்கள் உயிருடன் இந்த காலப்பகுதியில் உழைத்திருக்க கூடிய பணத்தை வழங்குவதன் மூலமும் அவர்கள் கொல்லப்பட்ட காலப்பகுதியில் இருந்து அவர்களுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை என்றாலும் குறைந்த பட்சம் தீர்க்க முடியும். ஒரு உயிருக்கான விலை பணம் என்பது அல்ல.

ஆனால் கொல்லப்பட்டிருந்தால் அதற்குரிய பரிகாரமாக இழப்பீடு வழங்கப்படுவதும் அந்த கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் கட்டாயமானதே. இதன் மூலமே மீள நிகழாமையை உருவாக்க முடியும். 

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் மனித உரிமை ஆணைக்குழு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் மனித உரிமை ஆணைக்குழு

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 04 September, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US