புதுக்குடியிருப்பில் ஆசிரியர் இடமாற்றத்தை நிவர்த்தி செய்து தருமாறு கோரி போராட்டம்
புதுக்குடியிருப்பு- திம்பிலி ஆரம்ப பாடசாலையில் இருக்கும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்றையதினம் (29) காலை திம்பிலி ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றிருந்தது.
இதன்போது, குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆங்கில பாட ஆசிரியரின் இடமாற்றத்தினை நிறுத்த கோரியும் அப்பிரதேச மக்கள் கிராம மட்ட அமைப்பினர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததனர்.
இடமாற்றம்
கடந்த வருடம் மே மாதம் ஆங்கில ஆசிரியர் ஒருவர் இப்பாடசாலைக்கு நியமிக்கப்பட்டு திடீரென அந்த ஆசிரியருக்கு இம்மாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியரின் இடமாற்றம் குறித்து கோட்டக்கல்வி பணிமனையிடம் கதைத்தபோது இதற்குரிய தீர்வினை ஒரு மாதகாலத்திற்குள் வழங்குவதாக உரிய அதிகாரிகள் கூறியுள்ளதாக பெற்றோர்கள் கூறியிருந்தனர்.
எதிர்ப்பு நடவடிக்கை
இருப்பினும் ஒரு மாத காலத்திற்குள் ஆசிரியர் இடமாற்றம் நிவர்த்தி செய்யப்படாதுவிடின் மீண்டும் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் குறித்த கிராம மக்கள், கிராம மட்ட அமைப்பினர், நலன்விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
