எல்ல- வெல்லவாய கோர விபத்து : வெளியாகிய அதிர்ச்சித் தகவல்கள்
எல்ல - வெல்லவாய விபத்தில் சிக்கிய பேருந்தின் பதிவை தேசிய போக்குவரத்து ஆணையம் 2023 ஆம் ஆண்டு பதிவு நீக்கம் செய்ததாக போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
எனினும், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் பேருந்துகளை ஒழுங்குபடுத்த எந்த சட்டமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்காக
வீதியில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க வீதி மேம்பாட்டு ஆணையகம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விபத்தில் சிக்கிய பேருந்தை ஆய்வு செய்ய மோட்டார் போக்குவரத்து ஆணையர் துறையின் குழு ஒன்று அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளது.
மேலும், விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்காக போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் வீதி பாதுகாப்பு திட்டத்துடன் இணைக்கப்பட்ட போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று (06) எல்ல பகுதிக்குச் செல்லும் என்று பிரசன்ன குணசேன குறிப்பிட்டுள்ளார்.
எல்ல பொலிஸ் பிரிவின் எல்ல-வெல்லவாய பிரதான சாலையில், தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, சாலையில் 24வது கிலோமீட்டர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



