இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கைது!
யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த மூவர் நேற்றிரவு(21) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த மூவரும் யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, வாள்வெட்டு ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
இவர்கள் மூவரும் தலைமன்னாரில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தவேளை கடலில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளானர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri