அக்கரைப்பற்றில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு கஞ்சா கடத்திய இரு வியாபாரிகள் கைது
அம்பாறை அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்கு மோட்டார்சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை வியாபாரத்துக்காக கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (25.07.2023) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாறு பகுதியில் வைத்து 9 கிலோ 540 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்துள்ளார்.
பொலிஸார் நடவடிக்கை

மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகனவின் ஆலோசனைக்கமைய உதவி பொலிஸ் மா அதிபர் எம்.பி.லியனகே , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எதிர்மன்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். ஏ.கே பண்டார ஆகியோரின் வழிகாட்டலில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையில் சிறப்பு போதை பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் ஆர்.எம்.ஆர். சதுரங்க, பி.எஸ்.டபிள்யூ.எம்.ஏ.வெளகெதர, டி..டிபிள்யூ. வனசிங்க, டபிள்யூ.எம்.எஸ்.ஜ.வீரசிங்க, ஆர்.எம்,பி.பீ.ரத்நாயக்கா, எஸ்.ஜ.எம். அம்ஜாட, கே.தனுஷன், குணதிலக ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியவில் பெரிய கல்லாறு பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

இதன் போது மோட்டர்சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை கடத்திச் சென்ற இரு வியாபரிகளை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 9 கிலோ 540 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பாவித்த மோட்டர்சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அக்கரைப்பற்று 6 ம் பிரிவைச் சேர்ந்த 33, 42 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் நீண்டகாலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் எனவும் இவர்களை களுவாஞ்சிக்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டகளப்பு மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri