நீண்ட நாட்களின் பின் மோகன் பிணையில் செல்ல அனுமதி
தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை இணையத்தளங்களில் பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று(29) இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிணையில் செல்ல அனுமதி
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ்.அன்வர் சதாத் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டதையடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா இருவர் கொண்ட சரீர பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசு பிணையிலும் செல்ல உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம், சின்னத்துரை ஜெகன் ஆகியோர் இன்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்நகர் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.
பயங்கரவாத தடை சட்டம்
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த 2021 ஆண்டு இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 3ம் திகதி ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னருக்கு விளக்கமறியல் நீடிப்பு |