சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னருக்கு விளக்கமறியல் நீடிப்பு
சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல இன்று (29) பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜூலை13 ஆம் திகதி பொல்துவ சந்திக்கு அருகில் நாடாளுமன்ற வீதியில் இடம்பெற்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்பிலே இவர் குற்றப்பிரிவினால் கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டுகள்
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதாகவும், நாடாளுமன்றத்திற்கு செல்லும் பொல்துவ சந்தியில் அமைக்கப்பட்டிருந்த வீதித் தடைகளை அகற்றியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பாத்தும் கெர்னருக்கு சர்வதேச பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்ததுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொடர்புடைய செய்தி
சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னர் கைது |