அநுரகுமாரவின் வெற்றிக்கான காரணம் - ராஜபக்சர்கள் செய்த அந்த ஒரு தவறு..!
ராஜபக்சர்கள் ஊழல் செய்தமையினாலேயே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சி பீடம் ஏறினார் என மலையக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு மலையக பகுதியில் கருத்துக்கள் கேட்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
மேலும், கடந்த காலத்தில் ஊழல் செய்தவர்கள் கைது செய்யப்படுவது வரவேற்கதக்கது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் துணிச்சல்
மக்களிடம் காணப்பட்ட அச்சம் நீங்கி வருவதாகவும் குறிப்பாக போதைப்பொருள் ஒழிப்பில் அரசாங்கம் துனிச்சலாக செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் எதிர்பார்த்தை விட ஆட்சி நல்ல முறையில் நடைபெறுவதாகவும் மலையக பகுதியில் இன்னும் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



