சட்டவிரோத முறையில் கட்டுத்துவக்கினை வைத்திருந்த நபர் கைது
திருகோணமலை - கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றினை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மல்போசல, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மிருகங்களை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி வீட்டின் பின்புறத்தில் கட்டுத்துவக்கினை மறைத்து வைத்திருந்த நிலையிலே, கோமரங்கடவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுத்துவக்குடன் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
