தனமல்விலவில் கஞ்சா தோட்டம் முற்றுகை! மூவர் கைது (Photos)
தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் காணியில் சட்டவிரோதமான முறையில் 4 காணிகளில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டத்தை உடவலவ விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 3 பேரை கைது செய்துள்ளதுடன், கஞ்சா செடிகளையும் பிடுங்கி அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (13.08.2023) இடம்பெற்றுள்ளது.
உடவலவ விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிலுள்ள 4 கஞ்சா தோட்டங்களை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.
கஞ்சா செடிகள் அழிப்பு
இதன்போது கஞ்சா செய்கையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் அங்கு 20 பேசர்ச் காணியில் 4358 கஞ்சா செடிகளும், 10 பேர்ச் காணியில் 2178 கஞ்சா செடிகளும் ,30 பேர்ச் காணியில் 6751 கஞ்சா செடிகளும், 30 பேர்ச் காணியில் 7387 கஞ்சா செடிகளுமாக 20 ஆயிரத்து 674 கஞ்சா செடிகளையும் பிடிங்கி அழித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களையும் சான்று பொருளாக கஞ்சா செடிகளையும் தம்மிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.