சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 61 பேர் கைது (Photos)

Sri Lanka Police Batticaloa Jaffna Kilinochchi Trincomalee
By Rakesh Aug 29, 2022 12:21 PM GMT
Report

ஆட்கடத்தற்காரர்களின் பொய்யான கருத்துக்களை நம்பிக்கொண்டு பிற நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதை காணமுடிகின்றது.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் நேற்றிரவு(28) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கடற்படையினரின் பொறுப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 61 பேர் கைது (Photos) | Arrest Travel Abroad Illegally

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தல்

திருகோணமலைக்கு அப்பால் சந்தேகத்துக்கிடமாக பயணித்த மீன்பிடி படகு ஒன்று, கடற்படையின் P-465 என்ற விரைவு படகால் இடைமறிக்கப்பட்டதுடன், அதிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 29 பேர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் உட்பட 25 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் மற்றும் 18 வயதுக்குட்பட்ட இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், P-465 விரைவு படகின் மூலம் மேற்கொண்ட தொடர் சோதனையில் குறித்த மீன்பிடி படகுக்கு கரையிலிருந்து நபர்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் குச்சவெளியைச் சேர்ந்த இருவர் படகு ஒன்றுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதே கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த மற்றொரு இலங்கையைச் சேர்ந்த பல நாள் மீன்பிடி படகு ஒன்றைக் கடற்படையின் P-4443 என்ற விரைவு படகு மூலம் இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 61 பேர் கைது (Photos) | Arrest Travel Abroad Illegally

இதன்போது, வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட 5 ஆண்கள் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது

மேலும், P-4443 விரைவு படகு மூலம் மேற்கொண்ட சோதனையில், லங்காபட்டுன - வாழைத்தோட்டம் கடற்கரையில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும் நோக்கத்தில் நின்றிருந்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மொத்த சுற்றிவளைப்புகளில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டவர்கள், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, வாழைச்சேனை, கல்முனை, அக்கறைப்பற்று மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 61 பேர் கைது (Photos) | Arrest Travel Abroad Illegally

திருகோணமலை கடற்பகுதியில் கைதான 34 பேரும் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குச்சவெளியில் கைதான இருவரும் குச்சவெளிப் பொலிஸாரிடமும், வாழைத்தோட்டம் கடற்கரையில் கைதான 10 பேரும் ஈச்சிலம்பற்றுப் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் 

இதேவேளை யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் இன்று(29) இடம்பெற்றுள்ளது.

இதன்போது 17 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 61 பேர் கைது (Photos) | Arrest Travel Abroad Illegally

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரகசிய தகவலின் அடிப்படையில் கைது 

சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 61 பேர் கைது (Photos) | Arrest Travel Abroad Illegally

சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முற்றபட்டதாக கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்தி: எரிமலை, தீபன், கஜிந்தன்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US