4 மில்லியன் ரூபா மோசடி செய்து வசமாக சிக்கிய தம்பதி - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!
சிங்கள கடும்போக்கு செயற்பாட்டாளரும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான மஹசோன் பலகாயவின் தலைவருமான அமித் வீரசிங்க மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பணத்தை இழந்த நபர்களின் முறைபாட்டினையடுத்து, நேற்று(18.05.2026) இவர்கள் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி, பல்லேகல மற்றும் பதுளையின் எல்ல சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாக் குடில்களை (கபானா) அமைக்கும் செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதாக அறிவித்து அவர்கள் பல்வேறு நபர்களிடம் இருந்து மோசடியாக பணம் அறவிட்டு ஏமாற்றியுள்ளனர்.
4 மில்லியன் ரூபா பண மோசடி
ஒரேயொரு சுற்றுலாக் குடிலை மாத்திரம் பல்வேறு நபர்களுக்கு காண்பித்து அவர்களிடம் இருந்து தலா நான்கு மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளனர்.
அவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்த பல்வேறு நபர்கள் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை தொடர்ந்து நேற்றைய தினம்(18) அமித் வீரசிங்க தம்பதி பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தெல்தெனிய நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமித் வீரசிங்க கடந்த காலங்களில் மஹசோன் பலகாய என்ற பெயரில் கடும்போக்கு சிங்கள இனவாத அமைப்பொன்றைத் தாபித்து கண்டி, திகன கலவரம் உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களை சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், நவ நிவஹல் பெரமுண என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்திருந்த அவர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam