வெளிவிவகார அமைச்சின் சேவைகள் மீண்டும் ஆரம்பம் - பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மின்னணு ஆவண சான்றளிப்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்பு சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பக்கோளாறுகள் சீர்செய்யப்பட்டு தற்போது படிப்படியாக பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட சேவைகள்
பத்தரமுல்லையிலுள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் சான்றளிப்புச் சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்பை விரைவில் முழுமையாக மீட்டெடுப்பதற்குரிய பணிகள் தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழக்கத்தை விடக் கூடுதல் நேரம் எடுக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam