யாழில் இடமாற்றம் பெற்ற அதிபரை மீண்டும் நியமிக்க கோரி போராட்டம்
பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று(19.05.2026) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்துள்ளது.
அதிபருக்கு ஆதரவாக கிளம்பிய போராட்டக்காரர்கள்
இந்நிலையில், தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதன்போது, மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே, அதிபரின் தற்காலிக இடமாற்றத்திற்கு காரணம் என்ன அதிகாரிகளே பதில் சொல் உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.
போராட்டம் முடிவில் கல்வி பணிப்பாளருக்கு வழங்குவதற்கு மனு ஒன்றும் பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில், 75க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கிராம மக்கள் நலம் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டக்களத்தில் ஏற்பட்ட பதற்றம்
இதேவேளை, குறித்த அதிபர் மீது அதிருப்தியுற்ற பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் குறித்த அதிபரை மாற்றம் வேண்டும் என்று பல வருடங்களாக உரிய கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே குறித்த கடமை நிறைவேற்று அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று நடந்த போராட்டத்தின் அடிப்படையில் ஊடகவியலாளர் ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட போது, போராட்டக்காரர்களாக வந்திருப்பவர்கள் அதிபருக்கு எதிர் அணி என்றும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த போராட்டம் தொடர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam