சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் பலி
பண்டாரவளை தியத்தலாவை இராணுவ கல்வியல் கல்லூரி முகாமில் பழைய கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவர் இடிந்து இராணுவ வீரரின் மேலே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மடுல்சீமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான இராணுவ வீரரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இராணுவ வீரரின் உடல் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தியத்தலாவை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam