அர்ச்சுனா எம்.பியின் மோசமான தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுமகன்கள் இருவரை தாக்கும் வகையிலான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.
யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் (Ramanathan Archchuna) தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
யாழில் நேற்று இரவு, தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்குள் வைத்து அர்ச்சுனா எம்.பி காணொளி எடுக்க முற்பட்ட போது, அங்கு நின்ற நபருக்கும் அவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நபரை விடுதிக்குள் வைத்து துரத்தி துரத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காணொளி தற்சமயம் வெளியாகியுள்ளது.
எனினும், குறித்த நபர் தன்னைத் தாக்கியதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 17 மணி நேரம் முன்

இந்தியன் வங்கியின் IND Super 400 நாட்கள் FD திட்டத்தில் ரூ.4,44,444 முதலீடு செய்தால்.., எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam
