அரகலய போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்! தடுக்கத் தவறியதாக தேசபந்து தென்னகோனுக்கு குற்றப்பத்திரிகை
கடந்த 2022 மே 9ஆம் திகதியன்று காலி முகத்திடலில் அரகலய போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
நீதிமன்ற விசாரணை
காலி முகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னக்கோனை சந்தேக நபராக அறிவிக்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீடு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், தேசபந்து தென்னக்னோனுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
நீதிபதிகள் ஏ.எச்.எம்.டி. நவாஸ், அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, குறித்த மேன்முறையீட்டின் மீதான மேலதிக விசாரணைகளை செப்டம்பர் 2 ஆம் திகதிக்கு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
ரூபாயின் மதிப்பிழப்பு அந்நிய முதலீடுகளுக்கு கூடுதல் வாய்ப்பு! முதலீட்டுச் சபை தலைவரின் கண்டுபிடிப்பு