மருத்துவப் பட்டதாரிகளுக்கான நியமனம் : விண்ணப்பங்களை கோரியுள்ள சுகாதார அமைச்சு
2025 ஜூலை 4ஆம் திகதியுடன் தமது பயிற்சிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் பட்டதாரிகளிடமிருந்து, தரம் - I (Grade I) மருத்துவ உத்தியோகத்தர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
2025 ஜூலை 04 அன்று பயிற்சிக் காலத்தை முடித்த மருத்துவப் பட்டதாரிகள் இதற்கு தகுதிபெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காலதாமதமான விண்ணப்பங்கள்
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 ஏப்ரல் 04 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஆகும்.
அனைத்து விண்ணப்பங்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

முடிவுத் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறும் விண்ணப்பதாரர்களே அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
காலதாமதமாகக் கிடைக்கும் விண்ணப்பங்கள் தொடர்பில் அமைச்சு எந்தவிதப் பொறுப்பையும் ஏற்காது என விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.