கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

Ministry of Education Sri Lankan Peoples Sri Lanka Government Eastern Province Education
By Farook Sihan Apr 22, 2026 08:12 AM GMT
Report

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளில் ஏற்படும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரல் மற்றும் தெரிவு செயல்முறையில் முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே. குணநாதன் சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.

புதிய நடைமுறையின் படி, இதுவரை மாகாணக் கல்விப்பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளின் கீழ் இருந்த விண்ணப்ப கோரல் அதிகாரம், தற்போது அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு

ஈஸ்டர் தாக்குதலில் பெற்றோரை இழந்த சிறுவன்! 7 வருடங்களாக மறுக்கப்படும் கல்விக்கான வாய்ப்பு

தகுதியான அதிபர்கள் நியமனம்

இதன் மூலம், ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பாடசாலைகளின் தேவைகளுக்கு ஏற்ப விரைவான மற்றும் செயற்பாட்டுத்திறன் மிக்க நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முறையின் கீழ், 1AB, 1C, II மற்றும் III தரப் பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடங்களுக்கு உரிய விண்ணப்பங்கள் வலய மட்டத்தில் கோரப்பட்டு, நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் அறிமுகமாகும் புதிய நடைமுறை | Appointment Of Eastern Provincial School Principal

அதன் பின்னர், தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் மூலம் மாகாண கல்விச் செயலாளரிடம் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மாகாண நியமன அதிகாரியாக செயல்படும் மாகாண கல்விச் செயலாளர் இறுதி நியமனத்தை வழங்குவார்.

மேலும், 1AB மற்றும் 1C பாடசாலைகளுக்கு இலங்கை அதிபர் தரம் I, II தரப் பாடசாலைகளுக்கு தரம் II மற்றும் III தரப் பாடசாலைகளுக்கு தரம் III அதிபர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் மாகாண மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் கோரப்பட வேண்டியதுடன், வெற்றிடம் உருவாகும் தினத்திற்குப் பூர்வமாக குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே விண்ணப்பங்கள் அழைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் கோருவதற்கான காலவரையறை

மேலும், ஆண்டிற்கு இருமுறை மட்டுமே, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறைகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இதற்கு முன்பு மாகாண மட்டத்தில் வெளியிடப்பட்டிருந்த அனைத்து சுற்றுநிருபங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பாடசாலை அதிபர் நியமனத்தில் அறிமுகமாகும் புதிய நடைமுறை | Appointment Of Eastern Provincial School Principal

இந்த புதிய நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவித்த கல்வி நிபுணத்துவ சேவை ஆர்வலரும் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம். முக்தார்,

“கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் நீக்கப்பட்டு, தெளிவான மற்றும் கட்டுப்பாடுடைய புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இது நியமன செயல்முறையில் வெளிப்படைத்தன்மையையும் நியாயத்தன்மையையும் உயர்த்தும் முக்கிய முன்னேற்றமாகும்” என தெரிவித்தார்.

மேலும், இந்த மாற்றம் வலய மட்டத்தில் பொறுப்புணர்வை அதிகரித்து, தகுதியானவர்களை சரியான நேரத்தில் தெரிவு செய்ய உதவும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

முழுமையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறிய மகிந்த

முழுமையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறிய மகிந்த

அமெரிக்கா எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகரமான ஆச்சரியங்களுடன் ஈரான் தயாராகவுள்ளது! வெளியான எச்சரிக்கை

அமெரிக்கா எதிர்பார்க்காத பல அதிர்ச்சிகரமான ஆச்சரியங்களுடன் ஈரான் தயாராகவுள்ளது! வெளியான எச்சரிக்கை


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US