மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக புதியவர் நியமனம்
வடமாகாண கல்வி பணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருக்கும் தி.ஜோண் குயின்ரஸ் மத்திய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டு பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்தப்பட்டுள்ளார்.
குறித்த நியமனமானது இன்று(05.07.2024) முதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி நிர்வாக சேவை
1986ம் ஆண்டு அரச சேவையில் ஆசிரியராக இணைந்து அதிபராக, ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக, உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, 4 வலயங்களின் வலயக் கல்வி பணிப்பாளராக, மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக பணியாற்றியிருந்த நிலையில் தற்போது மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வருகின்ற நிலையில் இவருக்கு இவ் அதி உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 01.01.2024 முதல் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு தேசிய பொதுச் சேவை ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பிரம்மாண்டத்தின் உச்சம் வாரணாசி படத்திற்காக எஸ்.எஸ்.ராஜமௌலி வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா Cineulagam
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam