கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கார் - சிக்கிய பெண்
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் உரிமையாளர் இன்றி பல வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் எல்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் குறித்த கார் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம் முதல் SPKM- 8179 Nissan Bluebird கார் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
மர்ம கார்
இந்த கார் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த வெலேகே மாயா சுதேசிகா என்ற பெண்ணுக்கு சொந்தமானதாகும்.
தற்போது பலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றுடன் குறித்த கார் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று மதியம் 12.30 மணியளவில் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது சர்ச்சைக்குரிய காரை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துச் சென்றுள்ளனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
