இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட 200இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள்
இஸ்ரேலிலுள்ள ராணுவ இலக்குகளை நோக்கி 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹிஸ்புல்லா என்பது இரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும்.
இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி முகமது நிமா நாசர் கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்தம் குறித்த தனது சமீபத்திய திட்டத்தை மத்தியஸ்தர்களுடன் பகிர்ந்து கொண்டதாக ஹமாஸ் கூறுகிறது.
இஸ்ரேல் இந்த வாய்ப்பை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |